
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்பு போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு 800க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வாகன போக்குவரத்து, தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு ஆகியன செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, மான்டியா ஆகிய பகுதிகளிலேயே போராட்டம் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் இதுதொடர்பாக ஆளும்கட்சி எதிர்க்கட்சி ஆகியன எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை.
நாம்தமிழர்கட்சியினர் மட்டும், தொடர்ந்து காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் இன்றைக்கு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள கன்னட அமைப்புகளைக் கண்டித்தும் கர்நாடக வங்கி முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றனர்.
நேற்று திருச்சியில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்றைக்கு சேலத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் விவசாயிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் தமிழக அரசுக்கும், தமிழர்களுக்கும் எதிரான போராட்டங்களை தடுக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்துக்குரிய தண்ணீரை முழுமையாக வழங்கக் கோரியும் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் கர்நாடக அரசியல்கட்சிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் எந்தக்கட்சியும் அதைக் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


