ஜெய்யின் படங்களும் தாமத ரிலீஸும் பின்னே ரிசல்ட்டும்..!

 

எங்கேயும் எப்போதும் படம் ரிலீஸாகி வெற்றி பெற்ற சமயத்தில் அனைவரும் நடிகர் ஜெய்யை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஜெய்க்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு, அற்புதமாக நடிக்கிறார் என புகழாராம் சூட்டினார்கள். ஆனால் இன்ற நடப்பது என்ன..?

அதன்பின் ‘ராஜாராணி’ படம் ஒன்றைத்தவிர சொல்லிக்கொள்ளும்படியாக ஜெய்யின் படங்கள் எதுவுமே ஓடவில்லை. ஒருபக்கம் படங்களின் கதை பெரிதாக ஈர்க்கவில்லை. அதேசமயம் ஜெய் படங்கள் எதுவும் சொன்ன நேரத்தில் வெளியாகாததும் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.

வலியவன், திருமணம் எனும் நிக்கா, புகழ் என எந்தப்படமும் சொன்ன நேரத்தில் ரிலீசாகவில்லை.. ஒரு பக்கம் தயாரிப்பாளர் தரப்பில் பொருளாதார சிக்கல் என்றால், இன்னொரு பக்கம் ஜெய் தேவையில்லாமல் படப்பிடிப்பிற்கு டிமிக்கி கொடுத்து படத்தை தாமதப்படுத்தியது இன்னொரு காரணம் என்றும் சொல்லலாம்.

ஒரு வழியாக இப்போது ஆக-5ல் வெளியாகப்போகும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படம் கூட எப்போதோ ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்த படம். அதற்கே இப்போதுதான் விடிவுகாலம் பிறந்துள்ளது. இதுவாவது ஜெய்க்கு திருப்பத்தை தருகிறதா என பார்ப்போம்..

 

Leave a Response