திமுக சமஉ கல்லூரியால் மக்களுக்குப் பாதிப்பு – அமைச்சர் தகவல்

சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் சென்னையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது….

தனலட்​சுமி சீனி​வாசன் மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் சீனி​வாசன் கல்​லூரி ஆகிய இரு கல்வி நிறு​வனங்​களுக்​கும் நிகர்​நிலை பல்​கலைக்​கழக அந்​தஸ்து வழங்​கப்​பட்​டுள்​ளது.அந்த இரண்டு கல்​லூரி​களும் திமுக எம்​எல்ஏ
கதிர​வனுக்குத் தொடர்​புடையது.இரண்டு கல்​லூரி​களும் தனி​யார் பல்​கலைக்​கழகம் என்ற வரையறைக்கு கீழ்
வரு​வ​தால்,இந்தவாய்ப்பைப் பயன்​படுத்​தி,அவர்​கள் தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​திடம் இருந்து தடை​யில்லாச் சான்று பெறாமலேயே நேரடி​யாக பல்​கலைக்​கழக மானியக்குழு​வுக்கு விண்​ணப்​பித்து
நிகர்​நிலைப் பல்​கலைக்​கழக அந்​தஸ்து பெற்​றுள்​ளனர்.இதனால்,எம்​பிபிஎஸ் படிப்​பில் மாநிலஅரசு ஒதுக்​கீட்டு
இடங்​கள் பாதிக்​கப்​படும்.அரசுப்பள்ளி மாணவர்​களுக்​கான இடங்​கள் பறி​போகும்.கல்விக்கட்​ட​ணம் பல இலட்​ச​மாக உயரும் என்​பதை அறிந்தே அந்தக்கல்​லூரி​யின் நிர்​வாகி​கள் இத்​தகைய செயலைச் செய்​துள்​ளனர்.இது​தான்
அவர்​கள் மக்​களுக்கு வழங்​கும் நியாய​மா?

எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் செயல்​படும் உறுப்புக் கல்​லூரி​கள் நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகத்​தின் அந்​தஸ்து பெற விரும்​பி​னால்,சம்​பந்​தப்​பட்ட பல்​கலைக்​கழகத்​திடம் தடை​யில்லாச் சான்று கோரி விண்​ணப்​பிக்க வேண்​டும்.அதன்பேரில் 60 நாட்​களுக்​குள் பல்​கலைக்​கழகம் முடிவு எடுக்​கா​விடில் தடை​யில்லாச் சான்று
அளிக்​கப்​பட்​ட​தாகக் கருதப்​படும்.அந்தவகை​யில்,ஓசூரில் உள்ள செயின்ட் பீட்​டர்ஸ் மருத்​துவக் கல்​லூரி
கடந்தஆட்​சி​யில் தடை​யில்லாச் சான்று கோரி விண்​ணப்​பித்​தது.அதனை நிராகரிப்​ப​தாக 60 ஆவது நாளில்
முடி​வெடுத்​து,அதுகுறித்த விவரத்தை 67 ஆவது நாளில்​தான் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது.இதனால்
நீதி​மன்​றத்​தில் வழக்குத் தொடுத்து சம்​பந்​தப்​பட்ட கல்​லூரி​யானது தற்​போது நிகர்​நிலை அந்​தஸ்து பெற்​று​விட்​டது.

இதே​போன்று கற்பக விநாயகா மருத்​துவக் கல்​லூரிக்கு முதல் 60 நாளில் எந்தமுடி​வும் எடுக்​காமல்,90 ஆவது நாளில் தடை​யில்லாச் சான்றை பல்​கலைக்​கழகம் வழங்​கி​யிருக்​கிறது.அடுத்த இருமாதங்​களுக்குப் பிறகு அதை இரத்து செய்​துள்​ளது.இதுகுறித்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம்,உரிய காலக்​கெடு​வுக்​குள் மேற்​கொள்​ளப்​ப​டாத
பல்​கலைக்​கழகத்​தின் எந்தச் செயலை​யும் ஏற்​க​வில்​லை.இதனால் அந்தக் கல்​லூரிக்​கும் நிகர்​நிலை அந்​தஸ்து கிடைத்​துள்​ளது.

இத்​தகைய மக்​கள் நலனற்ற செயல்​கள் காரண​மாகவே தற்​போது எம்​பிபிஎஸ் இடங்​கள் குறையக்​கூடிய நிலை
ஏற்​பட்​டுள்​ளது.இதற்கு கடந்த திமுக அரசே காரணம் கல்வி மற்​றும் மருத்​து​வம் ஆகிய இரண்​டுமே
மாநிலப்பட்​டியலில் இருக்கவேண்​டும் என்​பது​தான் முதல்​வரின் விருப்​பம்.அதனை உறுதி செய்​யவே அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது.அந்தவகை​யில் நிகர்​நிலைப் பல்​கலைக்​கழக விவ​காரத்​தில் நீதி​மன்​றத்​தில் மனு
தாக்​கல் செய்யவிருக்​கிறோம்.தடை​யில்லாச் சான்​றுக்கு 60 நாள் அவகாசம் அளிப்​பது உள்​ளிட்ட விதி​களில்
திருத்​தம் செய்​ய​ ஆலோ​சித்து வருகிறோம்.வரும்காலங்​களில் மாநிலஅரசிடம் தடை​யில்லாச்சான்று பெறாமலும், அனு​மதி பெறாமலும் எந்தக்கல்​லூரிக்​கும் நிகர்​நிலைப் பல்​கலைக்​கழக அந்​தஸ்து வழங்​கக்​கூ​டாது என மத்​திய கல்விஅமைச்​சரிடம் கோரிக்​கை வைக்​கவிருக்​கிறோம்​.

இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்.

Leave a Response