
ஒடிசா தினத்தையொட்டி சென்னையில் வசிக்கும் ஒடிசா மக்களின் அமைப்பான உத்கல் அசோசியேசன் மெட்ராஸ் சார்பாக சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி….
விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பிரதமர் மோடி உடன் இணக்கமாகவ் செயல்படும் என நம்புகிறேன். பி.எம்.ஸ்ரீ உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்கள்,பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு அரசுடன் ஆலோசிக்கப்படும்.
காங்கிரசுக் கட்சியின் தொடர் தோல்விகளாலும்,மக்களின் நிராகரிப்பாலும் காங்கிரசுக் கட்சியினர் விரக்தியில் பேசுகின்றனர்.இராகுல்காந்தி தன்னை ஜமீன்தாரராக நினைத்துக் கொண்டு, நாட்டை ஆளலாம் என எண்ணிச் செயல்படுகிறார்.ஆனால்,தேர்தலில் மக்களின் முடிவுகள் வேறாக இருப்பதால் காங்கிரசுக் கட்சியினர் விரக்தியில் பேசுகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது.விசாரணைக்குப் பின்னரே அதுகுறித்தான முழுவிவரங்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறார் விஜய்.அவர்,பாஜகவின் மோடி அரசுடன் இணக்கமாகச் செயல்படுவார் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


