
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேற்குவங்கத்தில் இரண்டாம்கட்டத் தேர்தல் இன்று முடிவடைந்ததால் இன்று மாலை ஆறு மணிக்கு மேல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அவற்றில் பெரும்பாலான கணிப்புகளில்,தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் கருத்துக் கணிப்பில், திமுகவுக்கு 145 இடங்கள் கிடைக்கும் என்றும் அதிமுகவுக்கு 65 இலிருந்து 85 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சாணக்யா கருத்துக் கணிப்பில், திமுகவுக்கு 145 முதல் 160 இடங்கள், அதிமுகவுக்கு 50 முதல் 65 இடங்கள் மற்றவை 13 முதல் 18 இடங்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவி கருத்துக் கணிப்பில், திமுகவுக்கு 125 முதல் 145 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.அதிமுகவுக்கு 65 முதல் 80 இடங்கள், தவெக 18 முதல் 24 இடங்கள் மற்றவை 6 முதல் 8 இடங்கள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
அக்னி நியூஸ் கருத்துக்கணிப்பில்,திமுக 43.1% விழுக்காடு மற்றும் 169 இடங்கள், அதிமுக 34.8% விழுக்காடு 64 இடங்கள், தவெக 15.1% விழுக்காடு 1 இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மின்னம்பலம் கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 155 அதிமுகவுக்கு 72 மற்றவை 7 இடங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் கணிப்புல்,திமுகவுக்கு 125 முதல் 145 இடங்கள், அதிமுகவுக்கு 65 முதல் 80 இடங்கள், மற்றவை 20 முதல் 30 இடங்கள்
டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பில், திமுகவுக்கு 155 இடங்கள்,அதிமுகவுக்கு 45 முதல் 65 இடங்கள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
இவைதவிர மேலும் சில கணிப்புகளிலும் திமுகவே முன்னணி என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி, எல்லாக் கணிப்புகளிலுமே தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி என்று சொல்லப்பட்டிருப்பதால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
