திமுகவுக்கு வைத்த பொறியில் தானே சிக்கிய பாஜக – விவரம்

2023 ஆம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது.அதன்​படி, நாடாளு​மன்​றம்,
சட்​டப்​பேர​வைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும்.மகளிர் இடஒதுக்​கீடுச் சட்​டத்தை
அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை 850 ஆக அதி​கரிக்க ஒன்றிய அரசு திட்​ட​மிட்​டது.

இதற்​காக,அவசரகதியில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக்கூட்​டம் ஏப்ரல் 16 அன்று தொடங்​கியது. முதல்நாளில் மகளிர் இடஒதுக்​கீடுச் சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசனத் திருத்​தம் (131 ஆவது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை
மக்​களவையில் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரசு, சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இந்தியா கூட்​டணிக் கட்​சிகள், கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன.புதுடெல்லி: நா​டாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்​தில், மகளிர் இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும்
அரசி​யலமைப்​புத் திருத்த மசோதா தோல்​வி​யில் முடிந்​தது.

அரசி​யலமைப்பு சட்​டத் திருத்​தம் போன்ற முக்​கிய மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் மக்​களவை, மாநிலங்​களவை​யில் மூன்​றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், இரு அவை​களி​லும்
அந்​தளவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிந்​தும் இந்த மசோ​தாவை பாஜக அறி​முகப்​படுத்​தி​யது.
இது எதிர்க்​கட்​சிகளுக்கு விரித்த வலை என்று கூறப்​படு​கிறது. வரலாற்றுச் சிறப்​புமிக்க மகளிர் இடஒதுக்​கீடு
மசோ​தாவை நிறைவேற்ற விடா​மல் எதிர்க்​கட்​சிகள் தடுத்​து​விட்​ட​தாகப் பரப்புரை செய்வதற்காகவே இதை நடத்தியிருக்கிறது பாஜக.

இதன்​மூலம் எதிர்க்​கட்​சிகள் பாஜக​வின் அரசி​யல் பொறி​யில் சிக்​கிக் கொள்ளும் என்று நினைத்தனர்.ஆனால் அது பாஜகவுக்கே வினையாக முடிந்திருக்கிறது.

தமிழ்​நாடு, மேற்கு வங்​கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடை​பெறுகிறது.இந்​தச் சூழலில்,மகளிர் மசோதா தோல்விக்​குக் காரணம் எதிர்க்​கட்​சிகள்​தான் என்ற கருத்தை தேர்​தல் பரப்புரையின்போது பிரதமர் மோடியே பேசினார்.இந்தக்கருத்து, 2 மாநில தேர்​தலில் பாஜகவுக்கு சாதக​மாக மாறும் என்று நம்பி பேசினர்.ஆனால் பாதகமாகிவிட்டது என்று பாஜக.வினரே கூறுகின்​றனர்.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்பது பா.ச.க. அரசின் உண்மையான நோக்கமாக இருப்பின், இப்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்களிலும் அனைத்து சட்டமன்றங்களிலும் 33% இடங்களை மகளிருக்கு அளிக்கும் வகையான சட்டத்தைக் கொண்டுவருவதற்கு பா.ச.க. அரசு தயாரா? என நாடு முழுவதும் அறைகூவல்கள் விடுக்கப்படுகின்றன.

இதனால்,எதிர்க்கட்சிகளுக்கு வைப்பதாக நினைத்த பொறியில் பாஜகவே சிக்கிக்கொண்டு பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response