
அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் இராசுப்பிள்ளையை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மன்னார்குடி பெரியார்சிலை அருகே நேற்று இரவு பேசியதாவது….
அம்மா (ஜெயலலிதா) உயிரோடு இருந்தவரை முன்னாள் அமைச்சர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தனர். அவரது மறைவுக்குப் பிறகும் நான் இருந்தவரை அவ்வாறுதான் இருந்தனர்.
நான் பெங்களூருக்குச் சென்றபிறகு அவர்களின் ஆட்டம் எல்லை மீறிப்போய்விட்டது.அவர்களின் ஆட்டத்திற்கு முடிவு கட்டப்படும்.நன்னிலத்தில் போட்டியிடும் ஆர்.காமராஜ்,வேதாரண்யத்தில் போட்டியிடும் ஓ.எஸ்.மணியன் போன்ற நபர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெற்றி பெறக்கூடாது.அதற்கு மக்களும் தயாராக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அஇபுதமமுக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பேசியதாவது….
தேர்தல் பிரசாரத்தின்போது பாமக நிறுவனர் இராமதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பரமக்குடிக்கு வரும் வழியில் அவரிடம் போனில் பேசினேன்.இராமதாசின் மனது புண்படும்படி அவரது மகன் நடந்து கொள்கிறார்.
அனைத்துத் தொகுதிகளுக்கும் நான் பிரசாரத்துக்கு செல்கிறேன்.அதனால் கவலைப்பட வேண்டாம் என அவரிடம் கூறினேன்.இந்தக் காலத்தில் அப்பா-மகன், அம்மா-பிள்ளை பாசம் எல்லாம் சும்மா.அரசியல் என்பது மிகவும் ஆழமானது.அரசியலில் 38 வருடமாக நான் உள்ளேன்.அரசியலில் எவ்வளவோ பிரச்னைகள் வரும்.மக்களை நினைத்துக் கொண்டால் அந்த பிரச்னைகள் எல்லாம் சும்மா ஆகிவிடும்.இராமதாசு 88 வயதில் அரசியல் பிரசாரம் செய்கிறார்.அவரது மகன் இதுமாதிரி அவரது மனதைப் புண்படுத்தினால் பொதுமக்களுக்கு எப்படி நல்லது செய்வார்?
இவ்வாறு அவர் பேசினார்.


