
சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் (SMSM) மேல்நிலைப் பள்ளிக்கு கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தென்குமரி கல்விக்கழகச் செயலாளரும்,திரைப்படத தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், தனது சொந்த செலவில் இந்தக்கலையரங்கத்தை கட்டிக்கொடுக்க உள்ளார்.
அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சியில் பள்ளி செயலர் என்.மகாலிங்கம் தலைமை வகித்தார்.தலைமையாசிரியர் டி.கண்ணன் முன்னிலை வகித்தார்.டாக்டர் பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தார்.

இதில், சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிந்து மற்றும் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், பெரியநாடார்,ரவிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது……
திரைப்படத் தயாரிப்பாளர் பிடி.செல்வகுமாருடன் எனக்கு 40 ஆண்டு பழக்கம்.சினிமாவில் ஒழுக்கமான நபர்களை பார்ப்பது அரிது.எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாத சிறந்த மனிதர்.
தாய் தன் குழந்தையை பாதுகாப்பாகப் பார்ப்பது போன்று பி.டி.செல்வகுமார் விஜயைப் பாதுகாத்தார்.ஆனால் இன்றைக்கு அப்பா,அம்மா,மனைவி,குழந்தைகள் என யாரின் பேச்சையும் விஜய் கேட்கவில்லை.இவர் எந்தக் காலத்திலும் தலைவராக மாட்டார்.அந்தத்தகுதி விஜய்க்கு இல்லை.இன்று மனைவி குழந்தைகள் கூட இல்லை.
ஏழைகளுக்கு எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் எம்ஜிஆரின் பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது.
கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர்.ஒரு தலைவனாக இருந்தால் அந்த இடத்தில் துணிச்சலாக நின்றிருப்பார்.ஆனால் அங்கிருந்து தப்பித்து ஓடியவர்தான் விஜய்.அந்த இடத்தில் தம்பி பி.டி.செல்வகுமார் இருந்தாருந்தால் இப்ப்படிப்பட்ட சம்பவமே நடந்திருக்காது.
விஜயிடம் நல்ல ஆலோசகர் கிடையாது.விஜய்க்கு தலைவா,ஆதி,காவலன் படங்களுக்கு பிரச்சினை வந்தபோது அதை சாதுர்யமாக கையாண்டு பிரச்சினைகளை தீர்த்து வைத்ததுடன் அந்த படங்களை திரைக்குக கொண்டு வந்தவர் பி.டி.செல்வகுமார் என்பதை திரையுலகம் அறியும்.
இன்றைக்கு அம்பானி செய்யவேண்டிய விஷயத்தை பிடி செல்வகுமார் செய்கிறார்.அந்த அளவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பி.டி.செல்வகுமார் உதவிகளை செய்து வருகிறார்.இந்த மாவட்டத்தில் கல்விக்காக அவர் செய்யும் சேவையால் இந்த மாவட்ட மக்களின் நெஞ்சத்தில் என்றைக்கும் நிற்பார்.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்ல பண்பானவர்கள். கோடீஸ்வரனாக இருந்தாலும் அதிகாரம் இருந்தால் தான் மக்களுக்கு நல்ல சேவைகளை தொடர்ந்து செய்ய முடியும்.பி.டி.செல்வகுமாருக்கு இறைவன் அருளால் நல்ல பதவிகள் தேடிவரும்.
நடிகர் விஜய்க்காக 9 பத்திரிகைகள் நடத்தியவர் அவர். இந்த அளவுக்கு விஜய் உயரக் காரணமாக இருந்தவர். விஜய்க்கு மனிதர்களை மதிக்கத் தெரியாது.ஆனால் பி.டி.செல்வகுமார் பிறர் துன்பம் அறிந்து சேவையாற்றி வருகிறார். இவரைப் போன்றவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.


