
ஈரோடு கைத்தறி தொழில் முனைவோர் சங்கத்தை புனரமைப்பது தகுதியுடைய பயனாளிகளின் பட்டியலில் இணைப்பது ஆகியனவற்றை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் இன்று 30.07.2018 திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா பேசியிருக்கிறார.
அதன் விவரம் வருமாறு….
வணக்கம்,
கைத்தறித்துறையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் மனங்களில் குறிப்பாக கைத்தறித்துறை மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் மூலமாக மகிழ்ச்சியை ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
புதுதில்லி கைத்தறித்துறை மேம்பாட்டு ஆணையர் அலுவலக ஆணையின்படி (18.04.2018 தேதியிட்ட ஆணை எண் 1/2/2016DCH/P&S) துரதிருஷ்ட வசமாக கைத்தறித்துறை நெசவாளர்களாக உள்ள தொழில் முனைவோர் தகுதியுடைய பயனாளிகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் நலத்திட்டங்களின்கீழ் அவர்கள் நூலிழை பெற முடியாத நிலைஉள்ளது.
எனவே கைத்தறி நெசவுத்தொழில்முனைவோர்களை தகுதியுடையபயனாளிகளின் பட்டியலில் நிலைநிறுத்தும்வகையில் அவர்களைச் சேர்க்க உத்தரவிடுமாறு மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதனால் ஈரோடு கைத்தறிநெசவுத் தொழில் சார்ந்த 7000 நெசவாளர்கள் தங்கள் தொழிலை மீண்டும் நடத்த வாய்ப்பு ஏற்படும்.
அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் நெசவாளர் அடையாள அட்டைகளை வழங்கவும் நேரடி மான்யத்தை நேரடியாக வங்கிக்கணக்குகளில் செலுத்தும் DBT திட்டத்தின்கீழ் திட்டப் பயன்களை அவர்கள் அடைய வழிவகை செய்யுமாறும் மாண்புமிகு அமைச்சர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.
இது சம்பந்தமாக ஏற்கெனவே ஒரு முறை அவர் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


