
கால்பந்து உலகக் கோப்பைத் தொடரிலேயே மிக மோசமான போட்டி என்றால் அது கொலம்பியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டிதான்.
அதிலும் கொலம்பியா அணி வீரர்களின் முரட்டுத்தனமான பேச்சும், செயல்களும், அடாவடியும் வேறு எந்த அணியிலும் பார்க்க முடியாதது. இதையடுத்து இங்கிலாந்து அணியும் பதிலுக்கு பதிலாக முரட்டித்தனத்திலும் அடிதடியிலும் இறங்க நடுவர் கட்டப்பஞ்சாயத்து செய்தே ஓய்ந்து போய்விட்டார்.
இந்தப் போட்டியில்தான் அதிக மஞ்சள் அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.
இங்கிலாந்துக்குக் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில் அந்த அணியின் கேன் கோல் அடித்தார்.
போட்டியின் இறுதி நேரத்தில் கொலம்பிய வீரர் மிக்கா கார்னர் ஷாட்டில் கிடைத்த பந்தை தனது தலையால் முட்டி கோலுக்குள் தள்ள பந்து இங்கிலாந்து வீரரின் தலையில் பட்டு கோலுக்குள் போய் சேம் சேட் கோலானது.
ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததால் கூடுதல் நேரமாக 15 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. அதிலும் இரு தரப்பினருமே கோல் போடாததால், இன்னொரு 15 நிமிட நேரம் தரப்பட்டது. இந்த நேரத்திலும் யாரும் கோல் போடாததால் பெனால்டி முறை கடைப்பிடிக்கப்பட்டது.
பெனால்டியில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.
கால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி ஸ்வீடனை எதிர்கொள்ளவிருக்கிறது.
– சரவணன்


