ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்- அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு அறிக்கையின் ஒரு பகுதி….

இன்று ஆந்திர மாநில அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியாக செம்மர மாஃபியாக்கள்ஆகியுள்ளனர். மொரீஷியசில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள கொல்லம் காங்கிரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கிய புள்ளிகளில் ஒருவன். முந்தையமுதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டியின் சகோதரன் கிஷோர் குமார்ரெட்டி இன்னொரு செம்மரக் கடத்தல் மாஃபியா தலைவன்.
சந்திரபாபுநாயுடு கட்சியிலும் செம்மர மாஃபியாக்கள் இருந்தபோதிலும் கடப்பா மற்றும் சித்தூர்மாவட்டங்கள் தெலுங்கு தேசம் கட்சியின் பலவீனமான பகுதியாகவே உள்ளன. சென்றதேர்தலிலும் கூட இக்கட்சி இவ்விரு மாவட்டங்களிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை.சென்ற ஆண்டு, சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற கையோடு, பதவி ஏற்பதற்கு முன்னதாகவேஉயர் காவல்துறை அதிகாரிகளைக் கூட்டி அடுத்த பத்து நாட்களுக்குள் செம்மரக் கடத்தலைமுடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என ஆணையிட்டார். காவல்துறையிலுள்ள காங்கிரஸ்ஆதரவாளர்களையும் சேஷாசலம் காட்டுப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய ஆணையிட்டார்.
நவம்பர் 2014ல்”ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் படை” (APRSASTF)உருவாக்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் இதன் தலைவராக டி.ஐ.ஜி எம்.காந்தாராவ்நியமிக்கப்பட்டார். இன்று இருபது தமிழர்களைக் கொன்றது இவரது படைதான்.
நாயுடுஎதிர்பார்த்தது நடந்தது. காங்கிரஸ் ஆதரவு செம்மரக் கடத்தல் மாஃபியாக்கள் அவர்பக்கம் பணிவு காட்டத் தொடங்கினர்.
தமிழக எல்லையோரமாவட்டமான வேலூரிலும் கூட செம்மர மாஃபியாக்களின் செல்வாக்கு இருக்கத்தான்செய்கிறது. வேலூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாட்டியக்காரரானமோகனாம்பாளிடமிருந்து 4.4 கோடி ரூ பணமும் 72 பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். இவை செம்மரக்கடத்தல் மூலமாகச் சம்பாதித்தவைதான். ஆந்திராவிலும் தமிழகத்திலும் இந்த அம்மைக்கு30 வீடுகள் உண்டு, சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்காட்டில் கைப்பற்றப் பட்ட32 லட்ச ரூபாய்களுங் கூட செம்மரக் கடத்தலின் ஊடாகக் கிடைத்ததுதான் எனச்சொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.
சென்ற ஆண்டுமத்தியில் ஆந்திரக் காவல்துறை ஏழு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இவர்கள் அனைவரும்அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், விழுப்புரம்மாவட்டங்களைச் சேர்ந்த வன்னிய இனத்தவர்கள்.
சிறப்புப் படைஅமைத்து வேட்டையாடுவது ஆந்திர மாநிலத்தின் உள் அரசியலானாலும் கொல்லப்படுபவர்கள்எல்லோரும் கீழ் மட்டத்தில் உள்ள தமிழக மரம் வெட்டிகள்தான் என்பது குறிப்பிடத் தக்கது,வெட்டும் திறன் நுணுக்கமாக வாய்க்கப் பட்டுள்ளவர்கள் என்கிற வகையில் அதிக அளவில்தமிழர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற போதிலும் கொல்லுவது எனமுடிவெடுக்கும்போது பல்வேறு நிலைகளில் அவர்களுடன் இருந்து பணி செய்யும் உள்ளூர்மக்கள் கவனமாக விலக்கப்பட்டுத் தமிழர்களே பொறுக்கி எடுத்துக் கொல்லப்படுகின்றனர்.உள்ளூர் அடித்தள மக்களைக் கொன்றால் பெரிய அளவில் அரசியல் எதிர்ப்புகள் வரும்;தமிழர்களைக் கொன்றால் அப்படியான பிரச்சினை இருக்காது என்பதால்தான் இப்படி ஆகிறதுஎனச் சென்ற ஆண்டு ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டபோது இதை ஆய்வு செய்த ஒரு உண்மைஅறியும் குழு (NCDNTHR and HRF) குறிப்பிட்டது நினைவிற்குரியது.


