தமிழின் செவ்வியல் தகுதி நூலுக்கு தமிழக அரசு விருது.


இன்று காலை சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சியில் 2012-13 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் திரு,கே,சி,வீரமணி அவர்கள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார், நிகச்சியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் திரு மு,இராசாராம் இ,ஆ,ப, அவர்கள் மற்றும் சென்னைப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் போராசிரியர் ஆர், தாண்டவன் அவர்களும் உலகத்தமிழாய்ச்சி நிறுவன்த்தின் இயக்குநர் டாக்டர் விசயராகவன் ,மற்றும் உலகத்தமிழ்ச் சங்க இயக்குநர் டாக்டர் பசும்பொன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில். சுமார் இருநூறு பேர் பல்வேறு வகையான விருதுகளைப் பெற்றனர்.

மேலே உள்ள புகைப்படத்தில். இராசகுணா பதிப்பகம்சார்பாக வெளியிடப்பட்ட பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களின் ‘தமிழின் செவ்வியல் தகுதி’ என்ற நூலிற்காக சிறந்த பதிப்பாளர் என்ற விருதை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமிருந்து திரு.இராசேந்திரன் அவர்கள் பெறுகிறார்.

Leave a Response