
சமீப காலமாக பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாட்மின்டன் விளையாட்டில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த சாய்னா நேவலின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்கவுள்ளனர்.
இதில் சாய்னா வேடத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். இந்தப் படத்தை அமோல் குப்தே இயக்குகிறார். இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் நடிப்பது குறித்து அமோல் குப்தே கூறியிருப்பதாவது… “சாய்னாவின் முகம், உடலமைப்போடு ஸ்ரத்தாவின் முகம், உடலமைப்பு ஒத்துப்போகிறது.
இந்த கதையை சுமார் இரண்டாண்டுகள் தயார் செய்து வந்தேன். ஆரம்பத்திலிருந்தே எனது முதல் சாய்ஸாக ஸ்ரத்தா கபூர்தான் இருந்தார். இதுதொடர்பாக சாய்னாவுடன் கூட கலந்து ஆலோசித்து இருக்கிறேன்.
தற்போது ஸ்ரத்தா பாட்மின்டன் வீரர், ஜித்தேஷ் படுகோனேவிடம் பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது” என்றார்
