காலிசெய்த அலுவலகம் முன்பு தாமரை போராட்டம் நடத்தியது எப்படி?

பாடலாசிரியர் தாமரை, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிப்போன தன்னுடைய கணவர் தியாகு பகிரங்கமன்னிப்புக் கேட்டு வீடு திரும்பவேண்டும், நடுநிலையான குழு அமைக்கப்பட்டு தியாகுவின் கடந்த 20 அண்டுகால வாழ்க்கை குறித்து விசாரணை நடத்தவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தியாகுவின் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தினார்.
அவர் அமர்ந்துபோராட்டம் நடத்திய அந்த அலுவலகத்தை தியாகு காலிசெய்து பதினைந்துநாட்கள் ஆகிவிட்டனவாம். அந்த இடத்துக்குப் புதிதாகக் குடியேறியவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தடுமாறிப்போய்விட்டனராம்.  அந்தவிசயம் தெரியாமல் அங்கு போய்ப் போராட்டம் நடத்தினாரா தாமரை? அந்தஅளவு விவரம் இல்லாமல் போய்விட்டதா? என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அந்த வீட்டூரிமையாளர் மதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் காவல்துறை நடவடிக்கை இல்லாமல் போனதென்றும் சொல்லப்படுகிறது.

தியாகு இப்போது தன்னுடைய மகள் சுதா வீட்டில் இருக்கிறாராம். அந்த வீடு வேளச்சேரியில் இருக்கிறதாம். அவருடைய கட்சிக்கான அலுவலகம் ஈக்காடுதாங்கலில் இருப்பதாகத் தெரிகிறது.
இவர்கள் இருவருமே அரசியலிலும் இருப்பதால் இது குடும்பச்சிக்கல் மட்டுமின்றி அரசியலும் கலந்த சிக்கலாக ஆகியிருக்கிறது. இதனால் தமிழ்த்தேசியஅரசியலாளர்கள் இந்தச்சிக்கலில் தலையிட்டு சமரசம் செய்யமுற்பட்டுள்ளனர்.
இதனிடைய பிரிவு பிரிவுதான் அதை முறைப்படி செய்யவேண்டியதுதான் பாக்கி என்று தியாகு உறுதியாகச் சொல்லிக்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Response