
உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ‘பாகுபலி’ படத்தின் கதையை எழுதியவர் இயக்குநர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் என்பது அனைவருக்கும் தெரியும் .தற்போது இந்தியில் ‘நாயக் 2’ மற்றும் ‘ரவுடி ரத்தோர் 2’ ஆகிய படங்களுக்கான கதைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்பாக 18 மற்றும் 19 நூற்றாண்டுகளில் நடைபெறும் கதையொன்றை எழுதி முடித்துள்ளார் விஜயேந்திர பிரசாத்.
இந்தக்கதையின் நாயகனாக லாரன்ஸ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார். இதனை ராஜமெளலியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மகாதேவ் இயக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.


