
கிட்டத்தட்ட ஐந்து வருட உழைப்பை பாகுபலி படத்திற்காக அர்ப்பநித்ததன் பலனை இப்போது அறுவடை செய்துகொண்டு இருக்கிறார் பிரபாஸ். அவருடன் சேர்ந்து நடிகை அனுஷ்காவும் மிகப்பெரிய புகழ்வெளிச்சம் பாய்ந்துள்ளது.. இந்நிலையில் பிரபாஸின் அடுத்த படத்தின் கதாநாயகி யாரே என்பது குறித்து பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்..
மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் “சாஹூ’ என்கிற படத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக, பல புதிய இடங்களில் படம்பிடிக்கபட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் சுஜீத் இயக்குகிறார்… இந்தப்படத்தில் தற்போது பாலிவுட் நாயகியான காத்ரீனா கைப் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


