கட்டிப்பிடித்து சூப்பர்ஸ்டாரை கன்வின்ஸ் செய்த லாரன்ஸ்..!


தமிழ் சினிமாவின் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார்? என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது. விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் என அந்த டைட்டிலுக்கு ஆசைப்படாதவர்கள் கிடையாது. சம்பந்தப்பட்டவர்களே சும்மா இருந்தாலும், கூட இருப்பவர்கள் ஏற்றிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். ராகவா லாரான்ஸும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்

நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டில், ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ ராகவா லாரன்ஸ் என்று வருகிறதாம். இதையடுத்து சமூக வலைதளங்களில் லாரன்ஸை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பிக்கவே அதிர்ந்துபோனார் லாரன்ஸ்.

ஆனால் இந்த வேலையை பார்த்தது இயக்குனர் சாய்ரமணி தான்.. லாரன்ஸுக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்று நினைத்து மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அளிக்க நினைத்தாராம் அந்த ஒன்பதாவது வள்ளல்.. இது லாரன்ஸுக்கு தெரியாமல் நடந்தது என்றும் சொல்கிறார்கள்..

எது எப்படியோ லாரன்ஸ் ரஜினி ரசிகர் என்பதால் ரஜினி ரசிகர்களின் ஆதரவில் தான் அவரது வண்டியும் ஓரளவுக்கு ஓடிகொண்டிருக்கிறது.. இப்போது அதற்கே ஆப்பு வைத்தால் எப்படி..? அரண்டுபோன லாரன்ஸ், ரஜினியை நேரில் சந்தித்து அவரை கட்டிப்பிடித்து சிறு குழந்தைபோல இந்த தவறு நிகழ்ந்ததற்கான விளக்கத்தை அளித்து வந்துள்ளார்.. கையோடு சூப்பர்ஸ்டார் என்றால் அவர் ஒருவர்தான், நான் என் அம்மாவின் பெயரான கண்மணியை எனக்கு பட்டமாக இணைத்துக்கொள்கிறேன் என நிலைமையின் வெப்பத்தை தணிக்க முயற்சியும் எடுத்த்துள்ளார்.

Leave a Response