‘சாமி-2’வுக்கான அச்சாரம் போடப்பட்டது..!


ஹரி-விக்ரம் கூட்டணியில் அதிரடி போலீஸ் படமாக வெளியான ‘சாமியின் வெற்றியும் வீச்சும் ரசிகர்கள் அறியாதது அல்ல.. அந்தப்பத்தின் என் கார்டில் சாமியின் வேட்டை தொடரும் என இரண்டாம் பாகத்துக்கான லீட் வைத்திருந்தார் இயக்குனர் ஹரி.

அதற்கேற்ற மாதிரி இருமுகன் பட இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் நடிப்பில் சாமி-2 படம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார் ஹரி. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சாமி-2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் அடங்கிய லோகோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் சாமி-2 படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்திற்காக தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஹரி.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹரியுடன் இணைந்து சாமி-2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Response