‘வசூல் மன்னன்’ ; ராமராஜன், மோகன் வரிசையில் விஜய்சேதுபதி..?


கடந்த வருடம் முன்புவரை விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் மினிமம் கியாரண்டி என இருந்த நிலை மாறி, தற்போது தயாரிப்பளர்களின் தங்கச்சுரங்கமாக மாறியுள்ளது.. அதுமட்டுமல்ல, விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைவருக்கும் வசூலை வாரிகுவிக்கிறார்கள்..

இதனால் ‘மோஸ்ட் பேங்கபில் யங் ஆக்டர் (Most Bankable Young Actor) என்னும் இன்னொரு புதிய விருதையும் அவருக்கு வழங்கியுள்ளார்கள்.. பொதுவாக ரஜினி, கமல் கோலோச்சிய காலங்களில் நடிகர்கள் மோகனும் ராமராஜனும் அவர்கள் இருவரது படங்களை விட வசூலை அள்ளி குவித்தார்கள் என்பது வரலாறு..

அந்தவகையில் விஜய், அஜித் காலகட்டத்தில் விஜய்சேதுபதி அந்த இடத்தை நிரப்புகிறார் என்று சொல்லலாம்.. ஆனால் அவர்களைப்போல ஒரு குறுகிய வட்டத்தில் விஜய் சேதுபதி தன்னை அடைத்துக்கொள்ளும் நபர் இல்லை என்பதால் மோகன், ராமராஜன் போல அல்லாமல் விஜய்சேதுபதியின் திரையுலக பயணம் நீண்டுகொண்டே செல்லும் என உறுதியாக நம்பலாம்.

Leave a Response