
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் ஆழ் மனதில் பதிய வைக்கும் திறமை படைத்த நடிகர் குரு சோமசுந்தரம். சமீபத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக பாராட்டுகளை பெற்றது.. அடுத்து வெளியான குற்றமே தண்டனை’ படம் கூட அப்படித்தான்..
இதற்குமுன் ஜோக்கராய் பார்த்த குருசோமசுந்தரத்தை இனி வில்லனாக பார்க்கப்போகிறீர்கள்.. ஆம் ‘ஆண்மை தவறேல்’ பட இயக்குனர் குழந்தை வேலப்பன் தற்போது இயக்கிவரும் ‘யாக்கை’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் அதிரடி, மிரட்டல் என ஒரு சராசரியான வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வில்லனாக குரு சோமசுந்தரம் இந்தப்படத்தில் நடித்து வருகிறார்.
ஒரு தப்பான சூழ்நிலையை உருவாக்குபவன் தான் ‘யாக்கை’ படத்தின் வில்லன்…. அந்த கதாப்பாத்திரத்தை கனகச்சிதமாக உள்வாங்கி அற்புதமாக நடித்து வருகிறார் குரு சோமசுந்தரம். இந்தப்பத்தில் நாயகன் நாயகியாக கிருஷ்ணா-சுவாதி ஜோடி நடிக்கின்றனர்.


