முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி வெளிப்படை சவால்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, சட்டமன்ற வரலாற்றிலேயே ஆளுங்கட்சியினர் பேசுவது அவைக்குறிப்பில் இருந்து அதிகமாக நீக்கபடுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். மேஜையில் உள்ள மூன்று பைல்களைத் திறந்து பார்க்க வைக்காதீர்கள் என்று முதல்வர் கூறியிருந்தார்

பேரவைக்கு வந்திருக்கிறோமா அல்லது பாட்டு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. கோப்புகளைத் திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதலமைச்சர் கூறுவது ஏன்? கோப்புகளை ஏன் மேஜையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரர் சொன்னால்தான் திறப்பாரா? நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் சொல்கிறார்கள்.

கேள்வி நேரமே நடக்க முடியாத அளவுக்குதான் சட்டப்பேரவை நடக்கிறது. ஜோதிடர் என்ற வார்த்தை தவறில்லை. ஜோசியரை ஆலோசகராக நியமித்து நீக்கியுள்ளீர்கள். பேரவை நிகழ்வுகளை முதல்முறையாக நேரலை செய்தது திமுக ஆட்சியில்தான். அவைக்குறிப்பில் நீக்கப்படுவது எல்லாம் ரீல்சாக மாறி பரவிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக்குகளை சட்டப்பேரவையில் பேசக்கூடாது. முதல்வருக்கு ஓபன் சேலஞ்சாக சொல்கிறேன், கோப்புகளை திறந்து பார்க்கட்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் தி.மு.க. பயப்படாது; ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response