த.வெள்ளையனின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் நாம்தமிழர்கட்சியை அவர் ஆதரிக்கவேண்டும்- உணர்வாளர்கள் விருப்பம்

நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார்.
உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சில்லறை வணிகத்தைப் பாதுகாப்போம், உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்போம் என்ற கருத்துகளுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் த. வெள்ளையன், இரு சக்கர வாகனத்தில் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 1-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இந்தப் பயணம் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நிறைவடைகிறது. இந்த நிலையில், பாளையங்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
அப்போது வெள்ளையன் அளித்த பேட்டியில் மேலும் கூறியது:
புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்தி 25 ஆண்டுகள் ஆகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற போர்வையில் இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இதன்மூலம் பாரம்பரிய விவசாயத் தொழில், சிறு குறு தொழில்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. குளிர்பானங்கள், தரமற்ற பொருள்கள், விவசாயத்துக்கு தரமில்லாத விதைகளை வழங்கி கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன என்றார் அவர்.

வெள்ளையன் கூறியுள்ள இந்தக்கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு அதற்குத் தீர்வு காண்கிற விதமாக கீழ்க்காணும் செயல்திட்ட வரைவைக் கொடுத்துள்ளது  நாம்தமிழர்கட்சி.

* இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி
* ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை
* விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி
* பெருவணிக நிறுவனங்களுக்கு தடை

* கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை
* இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்

எனவே வெள்ளையனும் அவரது அமைப்பும் நாம்தமிழர்கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று அக்கட்சியினர் சொல்கின்றனர்.

Leave a Response