சமையல் எரிகாற்று விலை மேலும் உயர்வு – மக்கள் புலம்பல்

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று உருளை 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.

அதன்படி, ஒரு உருளை விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று உருளை விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒரு பக்கம் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இன்னொரு பக்கம் மாதாமாதம் சமையல் எரிகாற்று விலை உயர்வு என மக்களை தொடர்ந்து வதைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு என்று மக்கள் புலம்புகிறார்கள்.

Leave a Response