சமையல் எரிகாற்று உருளை விலை மேலும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிகாற்று உருளையின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது.

நேற்றுவரை ரூ 875 ரூபாயாக இருந்த விலை இன்றுமுதல் 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. வணிக அளவில் பயன்படுத்தபப்டும் சமையல் எரிகாற்று விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் மக்கள் வருவாய் இன்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்கு உள்ளாகி வரும் சூழலில், எரிகாற்று உருளை விலை உயர்த்தப் பட்டிருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர்.

இவ்விலையுயர்வால் மோடி அரசுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response