இரண்டாவது ட்வீட்டும் நீக்கம் – காலியானது ரஜினியின் நம்பகத்தன்மை

இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இதையொட்டி தற்போது கரோனா வைரஸால் இத்தாலியில் நடந்த பாதிப்பு நமக்கும் வந்துவிடக் கூடாது. ஆகையால் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ரஜினி வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

ரஜினி வீடியோவில் கரோனா வைரஸ் பற்றி கூறிய தகவல்கள் உறுதியானவை என கருத முடியாததால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவரது வீடியோ பதிவு யூடியூப் தளத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு டிவீட்டில் யு டியூப் வீடியோவின் இணைப்பை போட்டிருந்தார். ஆனால், அந்த வீடியோ யு டியூபில் அப்படியேதான் இருக்கிறது. இருந்தாலும் அந்த இணைப்பு உள்ள டிவீட்டையும் டிவிட்டர் நீக்கியுள்ளது.

அடுத்தடுத்து இரண்டு ட்வீட்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது ரஜினி மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அதோடு, யூட்யூபில் ஒரு வீடியோ போட்டு அதை அதிகம்பேர் பார்த்தால் அதிலிருந்து ஒரு வருமானம் கிடைக்கும். மார்ச் 12 அன்று நடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு காணொலியை அதில் பதிவிட்டு வருமானம் பார்த்த ரஜினிகாந்த், இப்போது கொரோனா விழிப்புணர்வு காணொலியிலும் வருமானம் பார்க்க ஆசைப்பட்டு யூடியூபில் அதை பதிவேற்றம் செய்ததோடு அதை விளம்பரம் செய்யும் நோக்கத்தில் ட்விட்டரில் அந்த இணைப்பைப் பதிவிட்டிருந்தார். அதைத்தான் ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

Leave a Response