டி20 தோல்வி எதிரொலி ஒருநாள் போட்டியில் மாற்றம்

இந்தியா நியூசிலாந்து மட்டைப்பந்து அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டித்தொடர் தற்போது நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட அத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன.இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா 20 ஓவர் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

தொடரை நியூசிலாந்து இழந்ததையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணி புதுமுகங்கள் கொண்ட ஒருநாள் அணியை அறிவித்துள்ளது.

இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் கைலி ஜேமிசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுடன் ஸ்காட் குக்கலீன், ஹாமிஷ் பென்னட் ஆகியோரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, பெர்கூசன் ஆகியோர் இன்னமும் காயத்திலிருந்து விடுபடவில்லை. இந்நிலையில் அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட பென்னட் மற்றும் குக்கலீன் ஆகியோர் கடைசியாக அயர்லாந்துக்கு எதிராக 2017-ல் ஒருநாள் போட்டியில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் ஹென்றி நிகோல்ஸ் அணியில் நீடிக்கிறார். அதே போல் நியூசிலாந்தின் அனுபவ விக்கெட் கீப்பர் டாம் லேதம் விக்கெட் கீப்பராக அணியில் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

நியூசிலாந்து ஒருநாள் அணி வருமாறு:

கேன் வில்லியம்சன், ஹாமிஷ் பென்னட், டாம் பிளண்டெல், கொலின் டி கிராண்ட் ஹோம், மார்டின் கப்தில், ஜேமிசன், ஸ்காட் குக்கலீன், டாம் லேதம், ஜிம்மி நீஷம், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

Leave a Response