அல்ஜாரி ஜோசப்பின் பந்தில் சுருண்ட ஐதராபாத் – மும்பை வெற்றி

ஐபிஎல் 12 – ஐதராபாத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 19 ஆவது லீக் போட்டி ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு நடைபெற்றது.

இதில் முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா 11 ரன், குவின்டன் டி காக் 19 ரன், சூர்யகுமார் யாதவ் 7 ரன், இஷான் கிஷன் 17 ரன், கிருணல் பாண்டியா 6 ரன், ஹர்திக் பாண்டியா 14 ரன், சாஹர் 10 ரன், என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 136 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் 46 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியில் சித்தார்த் கவுல் 2 விக்கெட் மற்றும் புவனேஸ்வர் குமார், சந்தீப் ஷர்மா,முகமது நபி, ரஷீத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. மும்பை அணியின் பந்து வீச்சில் ஐதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்களை இழந்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 17.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பை அணியில் சிறப்பாகப் பந்து வீசிய அல்ஜாரி ஜோசப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Leave a Response