ரஜினி கட்சி – ஆர் எம்.வீ கருத்து ரசிகர்கள் அதிர்ச்சி

எம்ஜிஆர் கழகத்தின் தலைவர் ஆர்எம்.வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க எம்ஜிஆர் கழகம் முடிவு செய்துள்ளது. எங்கள் கட்சித் தொண்டர்கள் திமுக வெற்றிக்குப் பாடுபடுவார்கள். எம்ஜிஆர் கழகத்துக்கு சீட் தரப்படுமா என்பதை இப்போது கூறமுடியாது.

திரைத் துறையில் நடிகர் ரஜினிகாந்தின் வளர்ச்சி என்பது அநேகமாக என் சத்யா மூவீஸ் மூலம்தான் அமைந்தது. ‘பாட்ஷா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசியதைப் பார்த்துதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோபப்பட்டு என்னை கட்சியில் இருந்து நீக்கினார்.

அப்போதுதான் அவர் என்னுடன் தொடர்பு கொண்டு, அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்றார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்று தடுத்தவர்களும் உண்டு.

ரஜினிகாந்த் சிறந்த நடிகர், மிகச் சிறந்த மனிதர், சிந்தனையாளர், ஆன்மிக உணர்வு படைத்தவர், எனது நெருங்கிய நண்பர். ஆனால், ஒரு நிலையான அரசியல் கட்சியை அவரால் நடத்த முடியுமா என்பது சந்தேகம். அவருடன் பலமுறை விவாதித்துள்ளேன். ‘‘அரசியலில் இருந்து வந்துவிடுங்கள். நான் படம் நடித்து தருகிறேன்’’ என்று என்னிடமே ஒருமுறை கூறினார்.

ஆர்எம்.வீரப்பனின் இந்தக் கருத்தால் ரஜினி கட்சி தொடங்குவார் என்கிற நம்பிக்கையில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response