நானே பொன்னாடை என்கிற கமல் பெண்களிடம் என்ன செய்வார்?

அரசியல் பயணத்தை இன்று தொடங்கியிருக்கும் கமல் தொடக்கத்திலேயே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இராமேசுவரம் கணேஷ் மகாலில் மீனவ சங்கப் பிரதிநிதிகளை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,

மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது தனது கடமை. தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று. மீனவத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். மீனவர்களும் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும். உங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிக்கை வாயிலாக அறிவதற்கு பதிலாக நான் நேரில் சந்தித்து அறிய வந்திருக்கிறேன். மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களே தவிர அதனை நிறைவேற்றவில்லை . நீங்கள் செயல்பட வேண்டிய விதம், சர்வதேச சட்டங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டும். நாம் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலாம், அதற்கான நாளும் ,நேரத்தையும் தேர்வு செய்வோம்” என்றார்.

அந்நிகழ்வில், மீனவர் சங்கப் பிரதிநிதிகளை ஆரத்தழுவி கமல் தனது ஆதரவைத் தெரித்தார். பொன்னாடைகளைத் தவிர்த்த கமல்ஹாசன். பொன்னாடைகள் போர்த்திக் கொள்ளும் வழக்கம் இல்லை. இங்கு நானே ஆடைதான். அவர்களை நான் தழுவும்போது அவர்களுக்கு நான் ஆடை, எனக்கு அவர்கள் ஆடை என்றார்.

நானே ஆடை என்று அவர் சொன்னது சர்ச்சையாகியிருக்கிறது.

இது திரைப்படப் படப்பிடிப்பா? பெண்களிடத்திலும் அவர் இவ்வாறுதான் நடந்துகொள்வாரா? அவர் கட்சியில் மகளிர்க்கு இடமில்லையா? என்கிற விமர்சனங்கள் வருகின்றன.

Leave a Response