நடிகர்திலகம் சிவாஜி பற்றிய ஆய்வு நூல் திறனாய்வு விழா

சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக அரங்கத்தில் நவம்பர் 18,2017 மாலை,நக்கீரர் தமிழ்ச் சங்கம்,எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக பாரிவேந்தர் தமிழ் மாணவர் மன்றம் சார்பில் மு.ஞா.செ.இன்பா எழுதிய கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை
நூலின் திறனாய்வு விழா நடைபெற்றது

நக்கீரர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார்.

விழாவில் இலக்கியவாதிகள் சிவாஜியின் ஆளுமையைக் குறித்துப் பேசினார்கள்.

இளைய சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சமி,செல்வி,ஸ்வீட்லின்,செல்வி.வினோதினி ஆகியோர் ஆய்வு உரை நிகழ்த்தினர்.

தமிழ்ப் பேராயத்தின் செயலர் முனைவர் கரு.நாகராஜ்,தேசியத்திலும்,நடிப்பிலும் சிவாஜி என்ற தலைப்பில் உரையாற்றினார்.அவர் பேசும்போது, சிவாஜி நிஜ வள்ளலாக வாழ்ந்தார்,கட்டபொம்மனையும்,கர்ணனையும்,சிவனையும் தமிழினத்திற்கு அடையாளப்படுத்தியவர் சிவாஜி என்று குறிப்பிட்டார்.

இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி,கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை நூல் ஒரு பொக்கிஷம். சிவாஜி குறித்து வந்த நூல்களில் இது ஒரு மணிமகுடம்.எழுத்தாளர்கள் கருத்து சுதந்திரத்தை யாருக்காவும் இழந்துவிடக்கூடாது.இன்பாவின் கருத்து சுதந்திரம்அவரின் கோணத்தில் தெளிவாக உள்ளது.ஆங்கில எழுத்தாளர்களைப் போன்ற ஆளுமையை இந்நூலைலில் பார்த்தேன் இது ஒரு அற்புதத் தேடல் என்றார்.

மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா பேசும்போது,சிவாஜியின் நாடகக் காலத்தில் இருந்து அண்ணாவின் தம்பியாக வாழ்ந்த காலம் வரை அழகாகப் பட்டியல் இட்டார்.

விழாவில் அகமதாபாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் கவிதாஸ்,எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயத்தைச் சேர்ந்த அருணாச்சலம்,பந்தளபதிப்பக சிவா,எழுத்தாளர் தொல்காப்பியன்,மக்கள் தொடர்பாளர் செல்வரகு,நக்கீரர் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலர்மீடியா பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Response