கதாநாயகியை இப்படி அவமானப்படுத்தலாமா சுசீந்திரன் அவர்களே…?


ஒரு கதாநாயகிக்கு, அதுவும் வேற்று மொழியில் இருந்து வந்த ஒருவருக்கு தமிழில் முதல் படம் ரிலீஸ் என்பது எவ்வளவு முக்கியமான நிகழ்வு.. ஆனால் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ பட நாயகிகலீல் ஒருவராக நடித்துள்ள மெஹ்ரீனுக்கு நிகழ்ந்த சோகம் தான் ரொம்பவே கொடுமையானது.

இந்தப்படத்தின் ஆரம்ப காட்சிகள், அதாவது சந்தீப்-மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துடன் ஒட்டாமல் இருந்தன. இது படத்தின் வேகத்தை குறைப்பதாக விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகள் கருத்துக்களை கூறிவருவதால், அதை கருத்தில் கொண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.

இன்றுமுதல் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் ரீ-எடிடட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.

இது பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறும்போது, “நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

படம் வருவதற்கு முன்பே கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைப்பது வழக்கம் தான்.. அப்போதுகூட முழுதுமாக நீக்க மாட்டார்கள்.. ஆனால் இப்படி படம் வெளியானபின் கதாநாயகி நடித்த அனைத்து காட்சிகளையும் நீக்குவது இதுதான் முதன்முறையாக இருக்கும்.. இது ஒரு நடிகையாக மெஹ்ரீனுக்கு இழைக்கப்பட்ட அநீதியே . இயக்குனர் சுசீந்திரனின் ரொம்பவே மெத்தனமான திரைக்கதை மற்றும் கேரக்டர் உருவாக்கத்திற்காக மெஹ்ரீனை பலி கொடுத்துவிட்டார்கள்.

இது சம்பந்தப்பட்ட நாயகிக்கு எவ்வளவு அவமானம்…? இன்னொரு பக்கம் சுசீந்திரன் தன்னிடம் சரக்கு காலியாகிவிட்டது என்பதையும், எடிட்டிங்கில் கோட்டை விட்டதையும் அவரே ஒப்புக்கொண்டு விட்டதை தான் அவரது இந்த நடவடிக்கை காட்டுகிறது.

Leave a Response