மிஸ்டர் ரணில் நீங்களும் சுடப்படவேண்டியவர்- காங்கிரசுக் கட்சி கடும்தாக்கு

ரணில்விக்கிரமசிங்கேவின் தொலைக்காட்சிப்பேட்டிக்குத் தொடர்ந்து கண்டனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தலைவர்கள் மட்டுமின்றி இந்தியஅளவிலும் அவருடைய பேட்டிக்குக் கடும் எதிர்ப்பு. என் வீட்டுக்குள் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றால் அவரை நான் சுடலாம். அப்படிச் செய்ய சட்டம் எனக்கு அனுமதி அளிக்கிறது என்று ரணில் கூறியிருந்தார். தமிழகமீனவர்களைக் கருத்தில்கொண்டே அவர் இவ்வாறு சொல்லியிருந்தார். இதற்கு, அகிலஇந்தியகாங்கிசுக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிசேக்சிங்வி, ரணிலுக்குத் தன்னுடைய கடும்எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். அதில், ஆமாம் மிஸ்டர் ரணில் உங்கள் வீட்டில் ஊடுருபவர்களை நீங்கள் சுடலாம். ஆனால் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் அப்பாவிகளை நீங்கள் சுட்டால் நீங்களும் சுடப்படவேண்டியவர். கொலைக்குற்றத்துக்காக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
ஊடுருபவர்களையும் வழிதவறிச் செல்லும் மீனவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாமல் சுடுவது ஒன்றே தீர்வு என்று கருதினால் ரணில்விக்கிரமசிங்கே பிரதமராக இருக்கத் தகுதி இல்லாதவர்.
இந்த அட்சியில் அண்டைநாடுகள் இந்தியாவை மிரட்டுகின்றன. அதற்கு அந்நாடுகளுக்கு உறுத்தல் இவ்வாவிட்டால் இந்தியாவுக்கு மோசமான நாட்கள் நடப்பதாக அர்த்தம். 50 அங்குலமார்பு வேண்டும் எனக்கூறிய பிரதமர் மோடி அதை வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்குப் பயன்படுத்தமாட்டார் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response