
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ சார்பில் மதுரை.ஆர்.செல்வம் தயாரித்துள்ள படம் ‘சீனி’. இதில் அறிமுக நாயகர்கள் சஞ்சய், பரத்ரவி இருவருடன் ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிப் பெண் நிருபராக வரும் ஓவியா மற்றும் சஞ்சய், பரத்ரவி ஆகியோருடன் ராதாரவி, செந்தில், ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், கஞ்சாகருப்பு, சின்னிஜெயந்த், வையாபுரி, ரவிமரியா, தாஸ், டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார், பாவாலட்சுமணன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மீரா கிருஷ்ணன், புவனா உள்பட பலர் நடித்துள்ளனர்.
சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் பாத்திரம் ஏற்றுள்ளார். பவர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இசை- ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்- சினேகன், விவேகா, நடனம்- ராதிகா, பாரதி, சண்டை பயிற்சி- -பவர் பாஸ்ட் பாபு, படத்தொகுப்பு-சாய் சுரேஷ், ஒளிப்பதிவு-நாகராஜன், தயாரிப்பு-மதுரை ஆர்.செல்வம், எழுத்து, இயக்கம்-ராஜதுரை.
சீனி படத்துக்கு சென்சாரின் ‘யு’ சான்றிதழ் மற்றும் தரமான படமெனும் பாராட்டு கிடைத்துள்ளது.
இந்தப்படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த மாதத்துக்குள் படத்தை வெளியிடும் வேலைகள் நடக்கின்றன. இப்போது படத்த்டின் நாயகி ஓவியா, பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டதால் படத்த்டின் பெயரையே ஓவியாவவிட்டாயாரு என்று மாற்றிவிட்டார்கள். இம்முன்று சொற்களில் உள்ள முதல் எழுத்துகளைச் சேர்த்தால் அதுவும் ஓவியாதான்.


