நடித்ததோ ஒரு படம் ; கிடைத்ததோ சூப்பர்ஸ்டார் பட்டம்..!


கடந்த வருடம் ‘பட்டதாரி’ என ஒரு படம் வெளியானது.. படம் அட்டர் பிளாப் தான்.. ஆனால் அதில் நடித்த அபி சரவணன், அதிதி என இரண்டு நட்சத்திரங்களை நம்பிக்கை தரும் விதமாக தமிழ்சினிமாவுக்கு தந்து சென்றுள்ளது என்றே சொல்லவேண்டும்.. குறிப்பாக நடிகர் அபிசரவணன் விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வருகிறார்.. டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிய விவசாயிகளுக்கு, திரையுலக பிரபலங்கள் மூலமாக சிறுசிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ‘சதுர அடி 3500’ பட விழாவில் கலந்துகொண்ட அபி சரவணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் அவர்களின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை விழாவில் கலந்துகொண்ட கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார்.

இதுபற்றி பாராட்டி பேசிய இயக்குனர் பாக்யராஜ், “நடிகர் அபி சரவணன் இந்த மேடையினை நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டார். வளரும் போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராகவேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விசயத்தில் நடந்தால் சந்தோஷம்” என அபி சரவணனை புகழ்ந்து தள்ளிவிட்டார்.. இதுபோன்ற பாரட்டுக்கள அவரை இன்னும் ஊக்கப்படுத்தும் தானே..?

Leave a Response