‘சாமி-2’வில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்..!


ஹரி-விக்ரம் கூட்டணியில் அதிரடி போலீஸ் படமாக வெளியான ‘சாமியின் வெற்றியும் வீச்சும் ரசிகர்கள் அறியாதது அல்ல.. அந்தப்பத்தின் என் கார்டில் சாமியின் வேட்டை தொடரும் என இரண்டாம் பாகத்துக்கான லீட் வைத்திருந்தார் இயக்குனர் ஹரி. அதற்கேற்ற மாதிரி இருமுகன் பட இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் நடிப்பில் சாமி-2 படம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார் ஹரி.

அதனைத் தொடர்ந்து சாமி-2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்தப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் உறுதியாகி உள்ளது.. ஹரியை பொறுத்தவரை சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் அனுஷ்காவே கதாநாயகியாக நடித்ததுபோல சாமி-௨வில் த்ரிஷாவே நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது..

இந்நிலையில் இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக இணைந்துள்ளது ஹன்ஷிகா, ஸ்ருதிஹாசன் போல இரண்டாவது கதாநாயகி கேரக்டரிலா, அல்லது த்ரிஷாவுக்கு பதிலாகவே நடிக்கிறாரா என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Leave a Response