
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்க உள்ளார். ஏற்கனவே ‘தாரை தப்பட்டை’ மற்றும் ‘மருது’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ள ஆர்.கே சுரேஷ், அவரின் வில்லன் நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்றார்.
இவர் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட தர்ம துரை மற்றும் சலீம் ஆகிய படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா, காமெடி நடிகர் சூரி ஆகியோர் நடிக்க உள்ளனர்.தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்திற்கு இப்போதுவரை டைட்டில் வைக்கப்படவில்லை.
வட சென்னையில் வசிக்கும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு, இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வட சென்னை பகுதிகள் போன்ற செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


