மத்திய பட்ஜெட்டில் 33அம்சங்கள்


பட்ஜெட் – 2017- 18 – ஹை லைட்ஸ்
1. வேளாண் கடன்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கீடு
2. அடுத்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த நடவடிக்கை
3. பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
4. வீடு இல்லாத ஒரு கோடி பேருக்க 2019க்குள் வீடு கட்டித்தர நடவடிக்கை
5. பயிர் காப்பீட்டுப் பரப்பு 50 சதவீதமாக அதிகரிக்கப்படும்
6. விவசாயிகளுக்கான 60 நாட்கள் வட்டி தள்ளுபடி தொடரும்
7. பால் பதப்படுத்தும் துறைக்கு ரூ.8ஆயிரம் கோடி ஒதுக்கீடு
8. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி ஒதுக்கீடு 48ஆயிரம் கோடியாக அதிகரிப்பு
9. கிராமங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
10. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை புள்ளி 3 சதவீதமாக குறைவு
11. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் வட்டி விகிதம் குறையும்
12. உற்பத்தித் துறையில் இந்தியா 9வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேற்றம்.
13. உயர்கல்வியில் பல புதுமையான திட்டங்கள் கொண்டுவரப்படும்! யு.ஜி.சி.யில் பல திட்டங்கள் கொண்டு வரபடும்
14. முதுநிலை மருத்துவ இடங்கள் 5 ஆயிரம் அதிகரிக்கப்படும்
15. கரும்பு நிலுவைத் தொகையை வழங்குவதற்காக ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
16. ஜார்க்கண்ட், குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்
17. இளைஞர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
18. நிதிபரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக மாற்ற நடவடிக்கை
19. தாழ்த்தப்பட்டோர் நலத்திட்டங்களுக்கு ரூ.52 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
20. மருத்துவ உபகரணங்களின் விலையை குறைக்க நடவடிக்கை
21. 2020ம் ஆண்டுக்குள் ஆளில்லா ரயில்வே கேட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும்
22. ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்த அடுத்த ஐந்தாண்டுகளில் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு
23. 3900 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்
24. 500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்
25. தனியார் பங்கேற்கும் வகையில் புதிய மெட்ரோ ரயில் சட்டம் கொண்டுவரப்படும்
26. நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.64 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
27. ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இணைய வசதி
28. 2 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய சக்தி வசதி
29. அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ-டாய்லெட் வசதி
30. புதிய தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்க 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
31. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 3 லட்சத்து 96ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
32.2,50000லிருந்து 500000வரை 5%விழுக்காடு வரி
33.அரசியல் கட்சிகள் ரூ2000 வரை மட்டுமே ரொக்கமாக நன்கொடைகள் பெற முடியும்

Leave a Response