ஈரோடு,செப்.16 (டி.என்.எஸ்) கர்நாடகம் மற்றும் தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் ஆசாமி வீரப்பனை விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதோடு முடிவுக்கு வந்த வீரப்பன் பரபரப்பு, தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு போஸ்டர் ரூபத்தில், ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் ஓடி விட்டது. வருகிற 18–ந் தேதி (சனிக்கிழமை) வீரப்பனின் 10–வது ஆண்டு நினைவு நாள்.
நாம் தமிழர் கட்சி பெயரில் ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் வீரப்பனை பாராட்டி நினைவு அஞ்சலி செலுத்தி போஸ்டர் ஓட்டப்பட்டு உள்ளது.
”10–ம் ஆண்டு நினைவேந்தல், எல்லை காத்த மாவீரன் வீரத்தமிழன் ஐயா வீரப்பன் அவர்களுக்கு வீர வணக்கம்” என்ற வாசகங்களுடன் ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


