திமுக ஆட்சியில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது தமிழ்நாடு – முவீ தகவல்

தரு​மபுரி​யில் நடந்த தொழிற்​சங்க இணைப்பு விழா பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்றார் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீர​பாண்​டியன்.அங்கு அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது….

தரு​மபுரி​யில் சிப்​காட் தொழிற்​பேட்​டையை விரைந்து தொடங்கவேண்​டும்.கோம்​பேரி கோம்பை வழி​யாக பொம்​மிடி செல்​வதற்​கான சாலையை விரைந்து அமைக்கவேண்​டும்.காவிரி​யாற்​றின் குறுக்கே மேகே​தாட்டு பகு​தி​யில்
கர்​நாடகா புதியஅணையைக் கட்​டி​னால் மேட்​டூர் அணைக்குத் தண்​ணீர் கிடைக்​காது.

இந்த நடவடிக்​கையைக் கண்​டித்​து,வரும் 13 ஆம் தேதி கிருஷ்ணகிரி மற்​றும் ஓசூரில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடத்தவுள்​ளோம்.

தமிழர்​களும்,கன்​னடர்​களும் சகோ​தரர்​களாக உள்​ளனர்.தமிழகத்​துக்கு தேவை​யான தண்​ணீரை கர்​நாடகா அரசு திறக்கவேண்​டும்.

போதைப் பழக்​கம் மற்​றும் பாலியல் துன்​புறுத்​தல்,வன்​கொடுமைக்கு எதி​ராக அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்​றம் சார்​பில் 1 கோடி கையெழுத்து இயக்​கம் நடை​பெறுகிறது.தமிழக மக்​கள் இதற்கு ஆதரவு தரவேண்​டும்.

மத்திய அரசின் கொள்கைகளால் பல தொழில்​கள் நெருக்​கடிக்கு உள்​ளாகி தொழிலா​ளர்​கள் பாதிப்​படைந்​துள்ள
நிலை​யில் அவர்​களின் வாழ்​வா​தா​ரம் காக்க இந்​தியா முழு​வ​தி​லும் ஆகஸ்ட் 6 முதல் 15 நாட்​களுக்கு
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் தேசியக்கொடியை ஏந்​தி​யபடி நடைபயணம் மேற்​கொள்​ளப்பட உள்​ளது.
இதற்​கும் தமிழக மக்​கள் ஆதரவு அளிக்கவேண்​டும்.

ஈரான் மீது மீண்​டும் போர் தொடுக்​கப்​பட்டு வரு​கிறது.வளை​குடா நாடு​களில் மலை​யாளம் பேசும் மக்​கள் பலர் வசித்து வரு​கின்​றனர்.அவர்​களுக்கு பணிப்பாது​காப்பு வேண்​டும்.ஈரான் மீது போர் தொடுக்​கும் அமெரிக்​காவை எதிர்த்து பிரதமர் மோடி குரல் கொடுக்கவேண்​டும்.கரூர் சம்​பவம் குறித்து முதல்​வர் சட்​டப்​பேர​வை​யில்
பேசி​யிருக்க வேண்​டும்.

வாக்கு மை காயும் முன்​பாக மக்​கள் பிர​தி​நி​தி​கள் கட்சி தாவுவது ஜனநாயகத்​தின் மீதான நெருக்​கடி ஆகும்.தமிழக முதல்​வர் புதி​ய​வர்.அவரிடம் இருந்து இன்​னும் அதி​க​மான திட்​டங்​கள்,கொள்​கைகளை நாடு எதிர்​பார்க்​கிறது. ஜனநாயகத்​துக்கு பொருந்​தாத உடல்​மொழிகளை முதல்​வர் விஜய் தவிர்க்கவேண்​டும்.

தேர்​தலில் கட்​சிகளின் வெற்​றி,தோல்வி​கள் இயல்​பானவை.ஆனால்,மதவாத சக்​தி​களை வீழ்த்த ஜனநாயக சக்​தி​கள் ஒன்​றிணைய வேண்​டும்.

கரூர் நிகழ்ச்​சி​யில்,இலஞ்​சம் கூடாது என முதல்​வர் பேசி​யிருப்​பது வரவேற்​கத்​தக்​கது.பலரின் உழைப்பை சிலர் சுரண்​டு​வது நல்​லதல்ல.ஆனால்,40 ஆண்​டு​கால குறை​களைச் சரிசெய்ய சற்று அவகாசம் தேவைப்​படும்.கடந்த ஆட்சிக் காலத்​தில்,இந்​தி​யா​விலேயே சமூகநலத் திட்​டங்​களை வழங்​கு​வ​தில் தமிழ்​நாடு முதலிடத்​தில் இருந்​தது.

கடந்த ஆட்​சி​காலத் திட்​டங்​கள் விருப்​பு,வெறுப்​பின்றி தொடரவேண்​டும்.தவெக தேர்​தல் அறிக்​கை​யில் அளித்த
வாக்​குறு​தி​களை உடனே நிறைவேற்றவேண்​டும்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

Leave a Response