
அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் தங்களுடைய சமஉ பதவிடிலிருந்து நேற்று திடீரென விலகினர்.
எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு சமஉக்களான அவர்கள் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பதவி விலகல் கடிதம் அளித்தனர்.
பதவி விலகல் கடிதத்தை அளித்த கையோடு,மூவரும் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தில் அவரது முன்னிலையில் தவெகவில் இணைத்துக் கொண்டனர்.அவர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய தவெக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றனர். தொடர்ந்து சுமார் 5 நிமிடம் அவர்களிடம் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்வுக்கு அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி,விஜய் கட்சிக்கு ஆதரவு அளித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொருளாளர் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….
3 சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் அறமற்றது,அவர்களை வரவேற்பது ஆபத்தானது,இது,உண்மையான மற்றும் நேர்மையான அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிற தவெகவின் கூற்றுக்கு ஒரு தெளிவான,சந்தேகத்திற்கிடமற்ற அச்சுறுத்தலாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


