மே 21 இல் மோடியைச் சந்திக்கிறார் விஜய்

நடிகர் விஜய், மே 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.மே 13 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

அதற்கு முன்பும் பின்புமாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அதற்கடுத்து தில்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்சா ஆகியோரைச் சந்திக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இப்போது பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம்.

ஏற்கெனவே,பாஜகவின் பின்னணி ஆதரவு மூலம் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்்என்கிற விமர்சனங்கள் இருப்பதால் அமித்சாவை வெளிப்படையாகச் சந்திப்பதைத் தவிர்க்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரைச் சந்திக்க, மே 21,22 ஆகிய தேதிகளில் நேரம் கேட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடி துபாய் பயணத்தை முடித்துத் திரும்பிய பிறகு விஜய்யை சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது.

முதல்வர் விஜய்யின் தில்லிப் பயணத்துக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் மற்றும் ஆட்சியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

– திருராம்

Leave a Response