நாளை அரசு விடுமுறை, 7 நாட்கள் துக்கம் – தமிழக அரசு அறிவிப்பு

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது.

இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் சென்னை நோக்கி குவியத்துவங்கினர்.

11-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, மாலை 6.10 மணியளவில் காலமானார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை (ஆகஸ்ட் 8,2018) அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Response