
விக்ரம் தற்போது கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் மற்றும் விஜய்சந்தரின் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் மாறிமாறி நடித்து வருகிறார். இதில் ‘ஸ்கெட்ச்’ படத்திந படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. தமன்னா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் ‘கங்காரு’ ஸ்ரீபிரியங்கா, சூரி, ராதாரவி, ஸ்ரீமன், ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை ஆயுதபூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ள நிலையில் கௌதம் மேனன் டைரக்சனில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இன்று முதல் கலந்துகொண்டுள்ளார் விக்ரம்.


