ஆண்டவன் கட்டளை தெலுங்கு ரீமேக்கில் ஸ்வாதி..!


கடந்த வருடம் விஜய்சேதுபதி ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஆண்டவன் கட்டளை. வெளிநாடு சென்று சம்பாதித்து கடன்களை செட்டில் செய்ய நினைக்கும் இளைஞா ஒருவன் வெளிநாட்டு செல்வதற்கு என்னவெல்லாம் சிரமப்படுகிறான் என்பதை அழகாக சொல்லியிருந்தனர்..

தற்போது இந்தப்படம் ‘லண்டன் பாபாலு’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.. இந்தப்படத்தில் ரித்திகா சிங் கேரக்டரில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி நடிக்க இருக்கிறார்.. கதாநாயகனாக புதுமுகம் ரக்சா என்பவர் நடிக, சின்னி கிருஷ்ணா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Leave a Response