ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் வாய்ப்பு நழுவியது


இந்திய திரையுலகின், குறிப்பாக தமிழ் சினிமாவின் அதிகபட்ச கனவு என்றால் ஆஸ்கர் விருது வெல்வது தான். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன் ‛ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்துக்காக ஏற்கனவே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வந்தார். ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல இந்த ஆண்டு மீண்டும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது பெயர் பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த வருடம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‛பீலே – பெர்த்த ஆஃப் ஏ லெஜென்ட்’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆஸ்கர் ரேஸ்க்கான இறுதிபரிந்துரை பட்டியலில் ரஹ்மானின் படம் இடம்பெறவில்லை. அதனால், ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்பை ரஹ்மான் இழந்துள்ளார்.

Leave a Response