மதுரை அலங்காநல்லூரில் கிராம மக்கள் ஒன்றுக்கூடி ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தை துவங்கிய நிலையில், சென்னை, கோவை, நெல்லை என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்கள் இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக் கோரியும் நடிகர் சங்கம் சார்பில் வருகிற ஜன.20ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று நடிகர் சங்கம அறிவித்துள்ளது.
இந்த ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒரு நாள் உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க சினிமாத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.