
ஆளில்லாத தீவில் 96 மீனவர்களையும் அவர்களது 7 விசைப்படகுகளையும் அடைத்து வைத்திருப்பதாக மீனவர் கூறிய தகவலையடுத்து மீனவ மகக்ளிடையே ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்மீனவர்களையும் 7 விசைப்படகுகளையும் உடனடியாக மீட்க தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ஜனாதிபதிக்கு அவசர மனு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்டுள்ள 2 விசைபப்டகுகளையும் 24 மீனவர்க்ளையும் விடுவிக்கவும் வேண்டுகோள் வைக்கபப்ட்டுள்ளது.
இந்திய பெருங்கடலின் அருகேயுள்ள ஒரு தீவு டீகோ கார்சியா. இது பிரிட்டனது கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தீவில் மீன்வளம் அதிகமாக கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டதால் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளுடன் அத்தீவு நோக்கி மின்பிடிக்க சென்றனர். திடீரென அந்த திசைநோக்கி வந்த பிரிட்டிஷ் கப்பல் ஏற்கனவே 2 படகுகளையும் அதிலிருந்த 24 மீனவர்களையும் பிடித்து அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை மீட்க தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மூலம் வலியுறுத்தபப்ட்டு வருகிறது.
இதற்கிடையே, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தற்போது 7 விசைப்படகுகளில் சென்ற தமிழ்நாடு, கேரளா மீனவர்கள் உட்பட 96 மீனவர்களை பிரிட்டிஷ் கப்பல் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவர் தனது விசைப்படகிலிருந்த வயர்லெஸ் கருவி மூலம் இதை மற்ற விசைப்படகினருக்கு சொல்ல, அவர்கள் கரைக்கு திரும்பியவுடன் மீனவர்களின் உறவினருக்கு தெரியபப்டுத்தியுள்ளனர். இதனால் மீனவர்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே கைதுசெய்யபப்ட்டுள்ள 24 மீனவ்ர்களையும் 2 விசைபப்டகுகளையும், தற்போது கைதுசெய்யபப்ட்டுள்ள 96 மீனவர்கள் மற்றும் 7 விசைப்படகுகளையும் போர்க்கால அடிபப்டையில் மீட்க இந்திய ஜனாதிபதி, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர், தமிழக முதல்வர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்னன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர், மீனவளத்துறைச் செயலாளர், குமரி மாவட்ட கலெக்டர், மீனவளத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இதன் தலைவர் ஜஸ்டின் ஆண்டணி கோரிக்கை மனு அனுப்பி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பார்க்க இவர்களது உறவினர்கள் ஆவலாய் உள்ளதால், இம்மீனவர்களுக்கு தங்கள் உறவினருடன் பேச வாய்ப்பு அளிக்க மத்திய அரசு ஆவன் செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார் ஜஸ்டின் ஆண்டணி.


