இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சனவரி தொடக்கத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு தோல்விதான் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறனவாம். இதை வெளியில் சொல்பவர்கள் மீதெல்லாம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்குமுறையை ஏவுகிறார்களாம். அண்மையில் நடைல்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இன்னொரு சிங்கள வேட்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.அலரிமாளிகை அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் அலரிமாளிகை வட்டாரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரு கருத்து கணிப்பு எடுத்துள்ளது அவர்களின் கருத்து கணிப்பில் மைத்ரிக்கு 65% என முடிவு வந்துள்ளது.
அலரிமாளிகையில் எமக்கு நெருக்கமானவர்களும் உள்ளனர் அவர்கள் மூலமே இந்த தகவல் எமக்கு கிடைத்து என குறிப்பிட்ட அவர் இந்த கருத்துக்கணிப்பின் முடிவினால் அலரிமாளிகை அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் பல்கலைக்கழகங்களினால் மற்றும் சர்வதேச அமைப்புகளால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகளின் முடிவுகளும் மைத்ரிக்கு அறுபது சதவீதத்துக்கும் அதிகமான வெற்றி வாய்புகள் இருப்பதாக தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே இலங்கை புலனாய்வு பிரிவினர் மைத்ரிக்கு 59% மஹிந்தவுக்கு 41% என கருத்து கணிப்பு கூறியதால் புலனாய்வு பிரிவின் உயரதிகாரி பதவிநீக்கம் என செய்தி வெளியிட்ட ராவய சிங்கள பத்திரிக்கை ஆசிரியர் சீ ஐ டி யினரால் விசாரணை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.