‘தண்ணி ராஜா’ டைட்டில் ‘கட்டப்பாவ காணோம்’ என மாறியது எப்படி..?


தமிழ்த் திரையுலகில் தற்போது வித்தியாசமான கதைக்கருவுடன் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் சிபிராஜ் நாயகனாக நடிக்க, கூடவே ஒரு வாஸ்து மீனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மணி செய்யோன். மீனை மையப்படுத்திய படமாக இருந்ததால், முதலில் இப்படத்துக்கு ‘தண்ணி ராஜா’ என்றுதான் பெயர் வைத்திருந்தார்களாம்..

இதைக்கேட்ட பலரும் ‘இது சரக்கை (மதுவை)ப் பற்றிய படமா?’ என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களாம். என்னடா இது வம்பாக போயிற்று என்று வேறு என்ன பெயர் மாற்றலாம் என யோசித்தபொழுது, நாயகன் சிபிராஜ் தான் ‘கட்டப்பா’ என்று வருகிற மாதிரி தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என்றாராம்.

“இதற்காக வாஸ்து மீன் ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு ‘கட்டப்பா’ என பெயர் சூட்டி இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப்படத்தில் மீனின் பெயர் ‘கட்டப்பா’ என்பதால் படத்துக்கு ‘கட்டப்பாவ காணோம்’ என்று பெயர் வைத்தோம்” என்கிறார் இயக்குனர் மணி செய்யோன்.

Leave a Response