சிவகார்த்திகேயன் பட டைட்டில் மாற்றப்படுகிறதா..?


தற்போது பாக்யராஜ் கண்ணன் என்பவரது டைரக்சனில் தனது சினிமா பயணத்தில் முதன்முறையாக, சற்றே வித்தியாசமான முயற்சியாக ‘ரெமோ’ என்கிற படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.. இந்தப்படத்திலும் அவருக்கு கீர்த்தி சுரேஷ் தான் ஜோடி. இந்தப்படத்தின் ‘ரெமோ’ என்கிற டைட்டில் மாற்றப்படலாம் என கடந்த சில நாட்களாக சில செய்திகள் வெளியாகின.

அதாவது ‘ரெமோ’ என பெயர் வைத்தால் தமிழக அரசின் கேளிக்கை வரிவிலக்கு கிடைக்கமால் போய்விடும் என்பதால் ‘ரெமோ’வின் விரிவாக்கமான ‘ரெங்கநாதன் என்கிற மோகனா’ என டைட்டில் வைக்கப்படலாம் எனவும் சொல்லப்பட்டது..

ஆனால் படக்குழுவினரோ, பெயர் மாற்றும் எண்ணம் இல்லை, ரெமோ என்ற பெயரிலேயே படம் வெளியாகும் என திட்டவட்டமாக சொல்கிறார்கள்.

Leave a Response